முப்பது பொன்மொழிகள்
1. காலத்தை வெல்ல முடியாது- ராமாயணம்
2. சரியான காலத்தில் உதவி குறைந்தாலும் சிறந்ததே. தேவை இல்லாத காலத்தில் கூடக் கிடைத்தாலும் என்ன பயன்?
3. நாம் தூங்கிக்கொண்டிருந்தாலும் காலம் விழித்துக் கொண்டிருக்கிறது
4. மரண காலம் வந்துவிட்டால் யார் யாரைக் காப்பாற்ற முடியும்?
5. நைந்து போன கயிற்றில் தொங்கும் கிணற்றுப் பானையை யார் விழாமல் பிடிக்க முடியும்?
6. வயது போனபின்பு தன்வந்த்ரியே வந்து வைத்தியம் செய்தாலும் பயன் என்ன?
7. ஒவ்வொரு வினாடியும் ஆயுள் கழிந்து கொண்டே இருக்கிறது!
8. எண்ணக்கூடிய விஷயங்களில் நான் காலமாக இருக்கிறேன்
9. அழிவில்லாத/முடிவில்லாத காலம் நானே!–பகவத் கீதை
10. பாறையானாலும் இறுதியில் அழிந்து போகும் (மண் ஆகிவிடும்)
11. ஆண் ஆகட்டும் பெண் ஆகட்டும்—மரணம் என்பது அகாலத்தில் ஏற்படுவது அரிது.
12. எல்லா ரத்னங்களையும் கொடுத்தாலும் ஒரு வினாடி ஆயுளைக் கூட விலைக்கு வாங்க இயலாது. அதை வீணாக்குவது எப்பேற்பட்ட மடமை!
13. சமயம் அறிந்து செய்வது பலன் தரும்.
14. காலம் விளையாடுகிறது. ஆயுள் போய்க்கொண்டிருக்கிறது
15. காலத்தினுடைய போக்கு புரிந்துகொள்ள முடியாதது.
16. காலம் செல்லவில்லை; நாம்தான் சென்று கொண்டிருக்கிறோம் (நம் ஆயுள் ஒவ்வொரு நிமிடமும் சென்று கொண்டிருக்கிறது)
17. கடந்த காலம் திரும்பிவாராது
18. சென்றது இனி மீளாது மூடரே! நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் (பாரதி)
19. சென்றதனைக் குறித்தல் வேண்டாம்; எதிர்காலத்தை எண்ண வேண்டாம் (நிகழ்காலத்தை பயனளிக்கும் வகையில் செலவிடு))
20. நாளை நாளை எண்ணாதே! நாளை வீணில் போக்காதே! நாளை நம்முடைய முறையோ; நமனுடைய முறையோ; யார் அறிவார்?
21. வண்டிச் சக்கரம் போன்றதே வாழ்க்கைச் சக்கரம்; மேலும் கீழும் போய்வரும்.
22. நல்ல காலம் வந்து விட்டால் மங்கள விஷயங்கள் தொடர்ந்து வரும் (தை பிறந்தால் வழி பிறக்கும்)
23. கெட்ட காலத்தில் புத்தி பேதலிக்கும்.
24. காலமே ஒருவனை பலவானாகவும் பலவீனனாகவும் ஆக்குகிறது
25. உரிய காலம் வரும் வரை கொக்கு போல காத்திரு!
26. ஒவ்வொரு வினாடியும் வங்கியில் சேமித்த நம் வாழ்நாள் கழிந்து கொண்டே இருக்கிறது. இதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது
27. காலமே எல்லா காரியங்களையும் முடிக்கிறது.
28. என்ன முயன்றாலும் வீட்டில் வாழமுடியாது (இறுதி நேரம் வந்துவிட்டால்)
29. காலம் என்பது வலிமையானது போனது போனதுதான்; திரும்பிவாராது.
30. மனிதர்களில் தன் ஆயுளை அறிந்தவன் எவனும் இல்லை
அன்புடன்
சங்கீதா சீனிவாசன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக